ஊருக்குள் புகுந்து சிறுவர்களைக் கடித்துக் குதறிய நாய்கள்... பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்த இளம்பெண்!

தெருநாய்கள்
தெருநாய்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடையாண்டிபட்டி கிராமத்திற்கு, வெளியில் இருந்த ஊருக்குள் வந்த நாய் ஒன்று கிராமத்தில் உள்ள மற்ற நாய்களைக் கடிதத்தது. இதனால் கிராமத்தில் பல நாய்களுக்கு வெறிபிடித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் நேற்று கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி - நிவேதா தம்பதியின் இரண்டு வயது மகனையும், ஜெயபாண்டி - ஜோதி தம்பதியின் ஏழு வயது மகனையும் அடுத்தடுத்து நாய்கள் கடித்ததில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு வெறிநாய்களிடமிருந்து சிறுவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனது மகனை வெறிநாய் கடித்ததை கண்டு நிவேதா என்ற இளம்பெண் மயங்கி விழுந்தார். அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெறிபிடித்து திரியும் நாய்களைப் பிடிக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுத்து கிராம மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in