போலீஸ் பந்தலுக்குள் புகுந்த ஷேர் ஆட்டோ... இரண்டு காவலர்கள் காயம்!

காவல் பந்தலில் புகுந்த ஷேர் ஆட்டோ
காவல் பந்தலில் புகுந்த ஷேர் ஆட்டோ

வாகன சோதனைக்காக போலீஸார் அமைத்திருந்த தற்காலிக பந்தலில் புகுந்த ஷேர் ஆட்டோ மோதி இரண்டு காவலர்கள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த சார்பு  ஆய்வாளர்
காயமடைந்த சார்பு ஆய்வாளர்

மருது பாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வாகன தணிக்கைக்காக மதுரை விமான நிலையத்தை அடுத்த சின்ன உடைப்பு பகுதியில் தற்காலிக போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாவடிக்கு அருகிலேயே பந்தல் அமைக்கப்பட்டு அங்கு 10க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்
கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்

இந்த நிலையில், போலீஸார் வாகனச்  சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, வேகமாக வந்த ஷேர் ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, போலீஸார் அமர்ந்திருந்த தற்காலிக பந்தலுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் பணியில் இருந்த  இரண்டு சார்பு ஆய்வாளர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். ஷேர் ஆட்டோவில் இருந்த பயணி ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஷேர் ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். போலீஸ் பந்தலுக்குள் ஷேர் ஆட்டோ புகுந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in