குறுக்கே புகுந்த மாடு... சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சோகம்!

கோப்பு படம்
கோப்பு படம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் சங்கர் சக்தி. இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்.எஸ்.சி படித்து வருகின்றார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் கல்லூரி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில், மேலூர் நோக்கி வருந்தார். அப்போது, சின்ன சூரக்குண்டு அருகே நான்கு வழிச்சாலையில் மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதன் மீது இடிக்காமல் இருக்க முயற்சித்த போது அவரது இருசக்கர வாகனம், நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

தடுப்பு சுவரில் மோதியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவரின் தலையில், அப்பகுதியில் இருந்த கம்பி குத்தியது. இதில் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மாணவன் சங்கர் சக்தி உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெற்றோர் உயிரிழந்த மாணவனின் உடலைப் பார்த்துக் கதறி அழுதது அங்கிருந்தவர்களை நிலைகுலைய செய்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் உயிரிழந்த மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரிக்கு சென்று திரும்பிய மாணவன் சாலை விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in