
நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் டிடிஎஃப்.வாசனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 17-ம் தேதி காஞ்சிபுரம் அடுத்த பாலுச்செட்டி பகுதியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்த பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரது வாகனம் சாலையோர தடுப்பில் மோதி விழுந்ததில் டிடிஎஃப் வாசனின் கை உடைந்தது. இருப்பினும் நல்வாய்ப்பாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதையடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்துவரப்பட்ட போது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், வாசனை கைது செய்தனர்.
தற்போது அவர் புழல் சிறையில் உள்ள நிலையில், ஜாமீன் கோரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவரது மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், டிடிஎஃப் வாசன் சார்பில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "நான் அப்பாவி. எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை. எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்தது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன். ஜாமீன் தாருங்கள்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரால் வாகனம் ஓட்ட முடியாத என்றும் 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென வாசன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, காவல்துறை சார்பில் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காததால், மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று கர்வா சௌத்: நிலவை ஏன் பெண்கள் சல்லடை வழியே பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!
அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!
பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ
டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!