பைக் சாவியை தர மறுத்த மகன் - கோடாரியால் மகனின் கையை வெட்டிய தந்தையின் வெறிச்செயல்

பைக் சாவியை தர மறுத்த மகன் - கோடாரியால் மகனின் கையை வெட்டிய தந்தையின் வெறிச்செயல்

பைக் சாவியை தர மறுத்ததால் ஆத்திரத்தில் தந்தையே மகனின் கையை கோடாரியால் வெட்டிக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் உள்ள போபாய் என்ற இடத்தில் 30 வயதுடைய மகன் பைக் சாவியை தர மறுத்ததால், 52 வயதுடைய தந்தை அவரின் கையை துண்டாக வெட்டியுள்ளார்.

சம்பவத்தன்று, மோட்டி கச்சி என்பவர் மகன் சந்தோஷிடம் பைக்கின் சாவியைக் கேட்டுள்ளார். ஆனால் சந்தோஷ் சாவியை கொடுக்க மறுத்துள்ளார். இது தந்தைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சந்தோஷை மோட்டியும் அவரது சகோதரர் ராம் கிஷனும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆத்திரத்தில் அருகில் கிடந்த கோடாரியை எடுத்து சந்தோஷின் இடது கையை வெட்டியுள்ளார் மோட்டி. அதன்பின்னர் வெட்டப்பட்ட கை மற்றும் கோடரியுடன் மோட்டி பாபாய் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த நிலையில் சந்தோஷின் மனைவி அவரை ஜபல்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேசிய தாமோ போலீஸ் சூப்பிரண்டு டி ஆர் டெனிவர், "மோட்டி கச்சி போலீசில் சரணடைந்தார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in