காதல் போட்டியில் தாய், மகள் மீது ஆசிட் வீச்சு: காதலனோடு சிக்கிய காதலி!

ஐஸ்வர்யா, தீனதயாளன்
ஐஸ்வர்யா, தீனதயாளன்

முன்னாள் காதலனுடன் பழகியதில் ஏற்பட்ட தகராறு காரணமாகப் பெண் மற்றும் அவரின் தாயார் முகத்தில் ஆசிட் வீசிய காதல் ஜோடியை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் லேகா. இவர் பார்த்திபன் என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைக் கைவிட்டுவிட்டு தீனதயாளன் என்பவரைக் காதலித்து வந்தார். இந்த காதலும் கசந்து போய் அவருடனான தொடர்பையும் காலப் போக்கில் நிறுத்தி விட்டார். இதற்கிடையில் லேகாவின் முன்னாள் காதலன் பார்த்திபனை, ஐஸ்வர்யா என்பவர் காதலித்து வருகிறார். லேகாவின் பிரிவைத் தாங்க முடியாத முன்னாள் காதலன் தீனதயாளன், அவரை பழிவாங்கத் திட்டமிட்டு ஐஸ்வர்யாவுடன் பழகி வருகிறார். லேகா இன்னும் உனது காதலன் பார்த்திபனுடன் பழகுவதாக ஐஸ்வர்யாவிடம் கூறி இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, தீனதயாளனை அழைத்துக்கொண்டு லேகா வீட்டிற்கு நேற்று சென்றுள்ளார். அவர் கையில் தயாராகக் கொண்டு சென்ற கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டையும் உடன் கொண்டு சென்றுள்ளார். இருவரும் லேகா வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். கதவு தட்டும் சத்தம் கேட்டு லேகா கதவைத் திறந்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே தீனதயாளனுடன் நின்றிருந்து ஐஸ்வர்யா கையில் வைத்திருந்த ஆசிட்டை லேகா மீது ஊற்றினார். லேகா அருகில் நின்றிருந்த அவரது தாயாருக்கும் முகத்தின் மீதும் ஆசிட் தெரித்துள்ளது. வலியால் துடித்த இருவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, போரூர் மங்களா நகர் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா மற்றும் தீனதயாளன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in