
காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பெண்ணின் பெற்றோரிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்புக்கோரி , காஞ்சிபுரம் எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மானாமதி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் மகன் ஹரிஷ் ( 25). இவர் ஓரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அதே தொழிற்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த பாலையூரைச் சேர்ந்த ஆர்த்தி என்பவரும் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இது அவர்களது உறவினர்களுக்கு தெரிந்ததால் ஆர்த்திக்கு உடனடியாக திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய ஆர்த்தி, அச்சரப்பாக்கத்தில் கடந்த ஒன்றாம் தேதியன்று கிறிஸ்தவ முறைப்படி ஹரிஷை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து மானாமதி கண்டிகையில் உள்ள கணவர் வீட்டில் தங்கியிருந்தார். இதைத் தெரிந்துகொண்ட ஆர்த்தியின் உறவினர்கள் உருட்டுக்கட்டைகளுடன் ஹரிஷ் வீட்டுக்கு வந்து மிரட்டிச் சென்றனர்.
இதனால் பயந்துபோன ஹரிஷ் - ஆர்த்தி தம்பதியினர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தஞ்சம் அடைந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்தனர். ஆர்த்தி அளித்துள்ள மனுவில், 'எனது குடும்பத்தினர் பணபலம், படைபலத்தால் எனது கணவர் குடும்பத்தை மிரட்டி வருகிறார்கள். அவர்களிடமிருந்து எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!
ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!
அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!
ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்