லாட்டரி மார்ட்டினின் சொத்துக்கள் அதிரடியாக முடக்கம்: என்ன காரணம் தெரியுமா?

லாட்டரி மார்ட்டினின் சொத்துக்கள் அதிரடியாக முடக்கம்: என்ன காரணம் தெரியுமா?

சிக்கிம் அரசுக்கு 910 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் 173.48 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்டின் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வருகின்றார். கடந்த 2019-ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர். லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. கடந்த 2009 - 2010 காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்திருப்பதாகவும் வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.

அதனடிப்படையில் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக மார்டின் மற்றும் அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக பல்வேறு கட்டங்களாக லாட்டரி அதிபர் நடத்தி வரும் நிறுவனங்கள், அவருக்கு சொந்தமான கட்டடங்கள், வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை படிப்படியாக முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ஏற்கனவே 277.59 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும், 173.48 கோடி மதிப்புடைய சொத்துகளை முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை மொத்தம் 451.07 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in