அதிர்ச்சி... லாரி மீது உரசிய மின்சாரம்; உடல் கருகி உயிரிழந்த டிரைவர்

அதிர்ச்சி... லாரி மீது உரசிய மின்சாரம்; உடல் கருகி உயிரிழந்த டிரைவர்

நெல் அறுவடை ஏற்றிச் சென்ற லாரி மீது மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் திருவாரூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள முத்துப்பேட்டை தாலுகா சிறுபட்டாக்கரை கிராமத்திலிருந்து ரவிக்குமார் என்பவர் நெல் அறுவடை இயந்திரத்தை லாரியில் ஏற்றிச் சென்றார். இந்த வாகனம் மன்னார்குடி அருகே வந்தபோது லாரியின் மீது சாலையில் மேல் சென்ற உயர்மின்னழுத்த கம்பி உரசியிருக்கிறது. இதனை கவனிக்காத ஓட்டுனர் ரவிக்குமார் லாரியை எடுத்துச் சென்றிருருக்கிறார். அப்போது லாரிக்குள் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஓட்டுநரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தாழ்வாக சென்ற மின் கம்பி உரசியதாலேயே விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in