அதிர்ச்சி... போதை மருந்து கொடுத்து பலாத்காரம்... கல்லூரி மாணவி பரபரப்பு வாக்குமூலம்!

பலாத்காரம்
பலாத்காரம்

கோழிக்கோடு மாநிலத்தில் கல்லூரி மாணவிக்கு போதை மருந்து பாலியல் பலாத்காரம் செய்தவரைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸை புலனாய்வுக்குழு வெளியிட்டுள்ளது.

கேரளா மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி புதன் கிழமை காணாமல் போனார். இதையடுத்து அவரது செல்போனுக்கு குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், செல்போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் செல்போன் டவரை வைத்து அவர் இருக்கும் இடத்தைத் தேடினர்.

செல்போன் டவர்
செல்போன் டவர்

கோழிக்கோடு தொட்டில் பாலம் அருகே ஆளில்லா வீட்டில் நிர்வாண நிலையில், மாணவி கட்டி வைக்கப்பட்டிருந்தது போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சுயநினைவின்றி இருந்த மாணவியை மீட்ட போலீஸார், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். தற்போது அந்த மாணவிக்கு நினைவு திரும்பியுள்ளது.

அவர் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜுனைத் அலியார்(25) என்பவர் கடத்திச் சென்று சித்ரவதை செய்து போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். அத்துடன் அவர், தன்னை நிர்வாணமாக புகைப்படம், வீடியோ எடுத்ததாக கூறினார்.

இதையடுத்து ஜுனைத் அலியார் மீது பாலியல் பலாத்காரம், கடத்தல், மிரட்டல் மற்றும் நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவு செய்ததற்காக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து ஐந்து கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருளையும் கைப்பற்றினர். அவரை கைது செய்ய டிஎஸ்பி வி.வி. லத்தீஷ் தலைமையில் போலீஸார் தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். மாஜிஸ்திரேட் முன்னிலையில் மாணவியின் வாக்குமூலம் பெறப்பட்டது.

லுக் அவுட் நோட்டீஸ்
லுக் அவுட் நோட்டீஸ்

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறுகையில்," நாங்கள் மாணவியை மீட்க வருவதற்கு முன்பு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஜுனைத் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றார். அவர் இருக்கும் இருப்பிடம் குறித்து எங்களுக்கு துப்பு கிடைத்துள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார்" என்றனர். ஜுனைத்தை கண்டுபிடிக்க புலனாய்வுக்குழு லுக்அவுட் நோட்டீஸை வெளியிட்டுள்ளது.

மாணவியைக் கடத்தி போதைப்பொருள் கொடுத்து வாலிபர் பலாத்காரம் செய்த சம்பவம் கோழிக்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in