சென்னையில் 3 பேர் பலியான விவகாரம்... மதுபான விடுதிக்கு சீல், உரிமையாளர் மீது வழக்கு!

மேற்கூரை இடிந்து விழுந்த மதுபான விடுதி
மேற்கூரை இடிந்து விழுந்த மதுபான விடுதி

சென்னையில் மதுபான விடுதியின்  மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் பலியாகி உள்ள சம்பவத்தில் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டு அதன் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விடுதிக்கு வெளியே போலீஸார்
விடுதிக்கு வெளியே போலீஸார்

சென்னை ஆழ்வார்பேட்டையில்  ஷேக்மேட் பப்  என்ற மதுபான விடுதி இயங்கி வருகிறது. இதில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.  தற்போது ஐபிஎல் போட்டி நடந்து வருவதால் அதை முன்னிட்டு  இந்த பப்பில் அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது. இதனால் மாலை நேரத்தில் பப்பில் கூட்டம் அதிகம் மோதும்.

இந்நிலையில் நேற்று மாலையிலும்  பப்பில்  கூட்டம் அதிகம் இருந்தது. பணியாளர்கள் தங்கள் பணியைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது   திடீரென்று பயங்கர சத்தத்துடன் பப்பின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் பப்பில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.  அந்த பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக  இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இடிந்து விழுந்த பகுதி
இடிந்து விழுந்த பகுதி

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர்.  இடிபாடுகளுக்குள் சிக்கிய மூன்று பேர் சடலங்கலாக மீட்கப்பட்டனர்.  இவர்கள் அங்கு வேலை பணியாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதில் 2 பேர் மணிப்பூரை சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.  மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கி உள்ளனரா என்று தேடும் பணி நடந்து வருகிறது. இதுபற்றி சென்னை அபிராமபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த விடுதி அமைந்துள்ள இடத்தின் சற்று தொலைவில் மெட்ரோ சுரங்க பாதைக்கான பணி நடந்து வருகிறது. இந்த பணியின் காரணமாக ஏற்பட்ட அதிர்வால்தான் மேற்கூரை இடிந்து விழுந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது. ஆனால், சுரங்கப்பாதை பணிகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இடிந்து விழுந்த மேற்கூரை கட்டிடத்தில் எந்தவிதமான அதிர்வுகளும் கண்டறியப்படவில்லை என்று மற்ற நிர்வாகம் உறுதிபட தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மதுபான விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபான விடுதியில் உரிமையாளர் அசோக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தலைமறைவாகிவிட்ட அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in