தகாத உறவுக்கு இடையூறு; மகளைக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை... மகிளா நீதிமன்றம் அதிரடி!

தகாத உறவுக்கு இடையூறு; மகளைக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை... மகிளா நீதிமன்றம் அதிரடி!
ராஜலெட்சுமி

ஊட்டியில் தனது தகாத உறவுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி காந்தள் முக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்கள் மகள் உஷாராணி (14). அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட  கருத்து வேறுபாடு காரணமாக  ஜெகநாதன், ராஜலட்சுமி பிரிந்து வாழ்ந்தனர்.

கொலை
கொலை

ராஜலட்சுமி, மகளுடன் கோடப்பமந்து அம்பேத்கர் காலனியில், தாய் வீட்டில் வசித்தார். அங்கு ராஜலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2019 ம்  ஆண்டில் 'உஷாராணி ஊஞ்சலில் விளையாடிய போது சேலை கழுத்தை இறுக்கியது' எனக்கூறி, ஊட்டி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உஷாராணி பரிதாபமாக உயிரிழந்தார். 

ஜெகநாதனின் சகோதரர் குமார், சிறுமி சாவில் மர்மம் இருப்பதாக, ஊட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், மகளை ராஜலட்சுமி கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து, 2019 மார்ச், 20ல் ராஜலட்சுமியை போலீஸார் கைது செய்தனர். 

ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. நீதிபதி ஸ்ரீதரன் வழக்கை விசாரித்து, ராஜலட்சுமிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in