மதுவிற்காக மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள்!

மதுவிற்காக மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள்!

மது அருந்த பணம் தராத ஆத்திரத்தில் மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் மதி. இவரது மனைவி தேசம். தம்பதியர் மகன்கள் மற்றும் மகளுடன் காசிமேட்டில் வசித்து வந்தனர். மது அருந்தும் பழக்கம் கொண்ட மதி, தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மதி தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் தேசம் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கொலை வழக்கு உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் மதி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதன் மீதான விசாரணை சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி முகமது ஃப்ரூக் முன்பு நடைபெற்றது.

விசாரணை முடிந்து நீதிபதி இன்று அளித்துள்ள தீர்ப்பில், மதி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிள்ளது. எனவே, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த அபராதத் தொகையில் மூன்று பிள்ளைகளுக்கும் தலா நான்காயிரம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் இவர் தீர்ப்பில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in