பரபரப்பு… காரின் அடியில் பெண்ணின் பைக்; விபத்தில் சிக்கிய லியோ திரைப்பட வழக்கறிஞர் குழுவினர்!

பரபரப்பு… காரின் அடியில் பெண்ணின் பைக்; விபத்தில் சிக்கிய லியோ திரைப்பட வழக்கறிஞர் குழுவினர்!

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த லியோ திரைப்பட வழக்கறிஞர் குழுவினரின் கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

லியோ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அதிகாலை 9 மணி முதல் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என்று தமிழ்நாடு அரசு கூறியது. ஆனால் காலை 4 மணி முதல் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து உள்துறை செயலாளர் அமுதாவை, லியோ திரைப்பட தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர்கள் சந்தித்தனர்.

அப்போது காலை 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்கள் கோரிக்கையை மனுவாக அளித்தனர். உள்துறைச் செயலாளரை சந்தித்து மனு கொடுத்துவிட்டு திரும்புவதற்கு ஆயத்தமானார்கள்.

எனவே சென்னை தலைமைச் செயலகத்தை விட்டு வெளியேற ஓட்டுநரை காரை எடுத்து வரச் சொல்லியபோது, அந்த கார் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதியது. இதனால் இருசக்கர வாகனம் காருக்கு அடியில் சென்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in