குஜராத்தில் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு கூடம்... ரூ.300 கோடி மதிப்பில் போதைப்பொருள்கள் பறிமுதல்!

குஜராத்தில் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு கூடம்... ரூ.300 கோடி மதிப்பில் போதைப்பொருள்கள் பறிமுதல்!

குஜராத்திலும், ராஜஸ்தானிலும் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ‘மெபெட்ரோன்’ என்ற போதைப் பொருள் தயாரிக்கப்பட்டு வருவதாக குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவும், குஜராத் தீவிரவாத தடுப்புப் படையும் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கின. இதில் குஜராத் தலைநகர் காந்திநகரில் ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையும், அம்ரேலி பகுதியில் ஒரு தொழிற்சாலையும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதேபோல, ராஜஸ்தானின் ஜலோர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் பிரம்மாண்டமான போதைப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த போதைப்பொருள் தொழிற்சாலைகள், பிரம்மாண்டமான வேதியியல் ஆய்வகம் போல காட்சியளித்தன.

இதையடுத்து, சம்பவ இடங்களில் இருந்து 149 கிலோ மெபெட்ரோன், 50 கிலோ எபிட்ரின் மற்றும் 200 லிட்டர் அசிட்டோன் ஆகியவற்றை கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 300 கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள போதைப் பொருள் கும்பல் தலைவனையும் தேடும் வேட்டை தொடங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in