நடிகை கௌதமிக்கு சொந்தமான 8.3 ஏக்கர் நிலத்தை 4.10 கோடி பணம் கொடுத்து வாங்கி 11 கோடிக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வசித்து வரும் பிரபல நடிகை கௌதமி சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையார் அலுவலத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தனக்கு சொந்தமான திருவள்ளுவர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில் உள்ள 8.3 ஏக்கர் நிலத்தினை விற்று தருவதாக கூறி சென்னை அண்ணாநகரை சேர்ந்த பலராமன் மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த ரகுநாதன் ஆகிய இருவரும் பொது அதிகாரம் பெற்று கொண்டனர். அதன் பின்னர் அந்த இடத்தையும் அதன் அருகில் உள்ள மற்ற இடங்களையும் சேர்த்து மும்பை சேர்ந்த Jaya Hind Investments (P) Ltd என்ற நிறுவனத்திற்கு கடந்த 2015ம் ஆண்டு விற்பனை செய்துவிட்டு தனக்கு ரூபாய் 4.10 கோடி மட்டும் விற்பனை தொகையாக கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் கடந்த 2021ம் ஆண்டு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்த பிறகு தான் தனக்கு சொந்தமான இடத்தினை ரூபாய் 11 கோடிக்கு விற்பனை செய்துவிட்டு தனக்கு வெறும் ரூபாய் 4.10 கோடி மட்டும் கொடுத்துவிட்டு 7 கோடி ரூபாயை ஏமாற்றிய விவரம் தெரியவந்தது. ஆகவே தன்னை ஏமாற்றிய பலராமன், ரகுநாதன் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு போலீஸாரால் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னை அண்ணாநகர் மேற்கு 6வது அவன்யூ பகுதியை சேர்ந்த பலராமன் (64) என்பவரை இன்று மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!
கனமழை : மிதக்கும் சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ பயத்தில் அலறும் பொதுமக்கள்!
மேடையில் உற்சாக நடனமாடிய முதல்வர்... ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!
அதிர்ச்சி... ஐஐடி வளாகத்தில் மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை!