மாற்றுத்திறனாளி குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா... பரபரப்பை உருவாக்கிய பெண்!

மாற்றுத்திறனாளி மகளுடன் பெண் தர்ணா
மாற்றுத்திறனாளி மகளுடன் பெண் தர்ணா
Updated on
2 min read

கோவையில் நிலப்பிரச்சினை தொடர்பாக அளித்த புகாரில் நடவடிக்கை இல்லாததால், மாற்றுத்திறனாளி குழந்தையுடன் பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அவர்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளிக்க வருகை தந்திருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே உள்ள காந்திபுரம் 1-வது வீதியை சேர்ந்த தவுலத் என்ற பெண் அவரது மாற்றுத்திறனாளி மகள் மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

மாற்றுத்திறனாளி மகளுடன் பெண் தர்ணா
மாற்றுத்திறனாளி மகளுடன் பெண் தர்ணா

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் விரைந்து சென்று அப்பெண்ணையும் குழந்தையையும் அகற்ற முயன்றனர். ஆனால் அவர் வர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பான சூழல் உருவானது. பின்னர் போலீஸார் அவரை சமாதானம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்கு அழைத்து சென்றனர்.

மாற்றுத்திறனாளி மகளுடன் பெண் தர்ணா
மாற்றுத்திறனாளி மகளுடன் பெண் தர்ணா

இது குறித்து தவுலத் கூறுகையில், “கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 8.5 ஏக்கர் நிலப்பரப்பில் எங்களுக்கு இடம் உள்ளது. அந்த இடத்தை எனக்குத் தெரியாமல் உறவினர்கள் சிலர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த திமுக பிரமுகருக்கு விற்று விட்டனர். அந்த இடத்தில் எனக்கு பங்கு வர வேண்டும். ஆனால் எந்தவித பங்கும் தரவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுமார் 8 ஆண்டுகளாக இது தொடர்பாக போராடி வருகிறேன். உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு வர வேண்டிய பங்கை மீட்டு தர வேண்டும்.” என்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டு தர்ணா செய்த பெண்ணால் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in