
திருச்செந்தூரில் குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்ட பெண், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், கோவை காவல் நிலையத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயில் காவல் நிலையத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த முத்துராஜ் என்பவர் தனது ஒன்றை வயது ஆண் குழந்தை ஹரிஷ் மாயமானதாக புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருச்செந்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவலும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையுடன் மாயமான பாண்டியன் மற்றும் திலகவதி தம்பதி, கோவை அடுத்த ஆலாந்துறை அருகே உள்ள பூண்டி சாலையில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
ஆலந்துறை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தங்களின் உறவினருக்காக குழந்தையை கடத்தியதாக இருவரும் தெரிவித்த நிலையில், சேலத்தில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரையும் சேலத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் திடீரென திலகவதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திலகவதியின் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது திலகவதியின் உடல் கோவை போளுவம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு, அவரது உடல் கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாச்சு... டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!
புதிய மதுக்கடைகள் திறக்கவேண்டும்... முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கும் எம்எல்ஏக்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறிய பவா செல்லதுரை... புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னையில் சோகம்: பயிற்சியின் போது ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!