ரப்பர்பேண்ட் வைத்து நகையைத் திருடிய கில்லாடிப் பெண்: உண்டியல் எண்ணுமிடத்தில் நூதனத் திருட்டு!

ரப்பர்பேண்ட் வைத்து நகையைத் திருடிய கில்லாடிப் பெண்: உண்டியல் எண்ணுமிடத்தில் நூதனத் திருட்டு!

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது தங்க‌ நகைகளை திருடிய கோயில் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் நிரம்பின. அதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது, பழனி கோயிலில் பொருட்கள் பாதுகாப்பு அறையில் பணிபுரியும் பாக்கியலட்சுமி (44) என்ற பெண் ஊழியர் ஒருவர் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் போது காலில் ரப்பர்பேண்ட் வைத்து 10.8 கிராம் அளவுள்ள தங்க நகையை நூதனமாக திருடியுள்ளார்.

காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து கோயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, பாக்கியலட்சுமியை கோயில் ஊழியர்கள் சோதனையிட்டதில் காலில் நகையை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

நூதன திருட்டில் ஈடுபட்ட பெண் ஊழியர்
நூதன திருட்டில் ஈடுபட்ட பெண் ஊழியர்

தொடர்ந்து, அவர் மீது அடிவாரம் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் போரில், வழக்கு பதிவு செய்த போலீஸார் பாக்கியலட்சுமியை கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது கோயில் இணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில், சிசிடிவி கேமரா கண்காணிப்பில் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த மூன்று முறை நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது கோயில் ஊழியர் ஒருவர் ரூ.90 ஆயிரத்தை திருடியதும், கடந்த மாதம் தங்கத்தினால் ஆன வேல் ஒன்றை துப்புரவு பணியாளர் கணேசன் என்பவர் திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டார். தற்போது, மூன்றாவது முறையாக பெண் ஒருவர் திருடி அகப்பட்டு சிறைக்கு சென்றுள்ளது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கோயிலுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி சரியாக நடைபெறுகிறதா? என்ற சந்தேகம் தற்போது பக்தர்களிடையே எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in