நிலத்தை அளவை செய்ய எதிர்ப்பு… தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு என்னும் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 2.30 ஏக்கர் நிலத்தில் 41 பட்டியலின சமூக மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இடம் அளந்து பயனாளர்களுக்கு வழங்கப்படாத நிலையில், ஆதே ஊரில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பல ஆண்டுகளாக அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

அரசு வழங்கிய இடத்தை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் அந்த இடத்தை அதிகாரிகள் அளந்து, உரியவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 8ம்தேதி நிலத்தை அளக்க வருவாய்த்துறை, காவல்துறையினர் சென்றபோது 2.30 ஏக்கர்கள் நிலத்தை பயன்படுத்தி வந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்த மாதேவி(38) அவரது மைத்துனர்களான மஞ்சுநாத்(32),முருகேசன்(30) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து போலிசார் முன்னிலையில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.

மீட்கப்பட்ட மூவரில் மஞ்சுநாத், மாதேவி ஆகியோர் ஆபத்தான நிலையில் ஒசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். அதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக இருவரும் ஒசூர் குணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாதேவி என்கிற பெண் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த மாதேவியின் உடலை ஒசூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!
தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!
ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!
பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!
அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!