நீச்சல் உடையுடன் புகைப்படம் வெளியிட்ட பேராசிரியை: அதிர்ச்சியடைந்த மாணவரின் தந்தை பகீர் புகார்!

நீச்சல் உடையுடன் புகைப்படம் வெளியிட்ட பேராசிரியை: அதிர்ச்சியடைந்த மாணவரின் தந்தை பகீர் புகார்!

பேராசிரியை ஒருவர் நீச்சல் உடையுடன் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவேற்றியதாக, ஒரு மாணவரின் தந்தை கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் பல்கலைக்கழகத்தில் புகார் அளித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நீச்சலுடை அணிந்திருந்ததாக, அக்கல்லூரியில் படிக்கும் இளங்கலை மாணவரின் தந்தை பி.கே. முகர்ஜி என்பவர் புகார் செய்ததையடுத்து, அந்த பேராசிரியையை பணியில் இருந்து நீக்கியுள்ளது பல்கலைக்கழகம்.

இது தொடர்பாக மாணவரின் தந்தை அளித்துள்ள புகாரில், "சமீபத்தில், எனது மகன் அந்த பேராசிரியையின் சில படங்களைப் பார்ப்பதைக் கண்டு நான் திகைத்தேன். அந்த பேராசிரியை வெளிப்படையாக பாலியல் ரீதியில் போஸ் கொடுத்ததைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

ஒரு பேராசிரியை உள்ளாடைகளை அணிந்து சமூக ஊடகங்களில் புகைப்படங்களைப் பதிவேற்றுவதைப் பார்ப்பது ஒரு பெற்றோராக எனக்கு முற்றிலும் வெட்கக்கேடானது. ஏனென்றால் நான் என் மகனை இதுபோன்ற மோசமான அநாகரீகத்திலிருந்து பாதுகாக்க முயற்சித்தேன். 18 வயது மாணவன் தனது பேராசிரியை உள்ளாடைகளை அணிந்து பொது வெளியில் தனது உடலைக் காட்சிப்படுத்துவதைப் பார்ப்பது மோசமானது மற்றும் முறையற்றது" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து அந்த பேராசிரியை பல்கலைக்கழகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அந்த பேராசிரியை முடிவு செய்துள்ளார். இந்த புகார் தொடர்பாக பேசிய அந்த பேராசிரியை, "ஒரு இளங்கலை மாணவரின் பெற்றோர், அவரது மகன் எனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து எனது புகைப்படங்களைப் பார்ப்பதைக் கண்டறிந்தார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த படங்கள் ஆட்சேபனைக்குரியதாகவும், பாலியல் ரீதியான தூண்டுதலை ஏற்படுத்துவதாகவும் அவர் கண்டார். இன்ஸ்டாகிராமில் எனது அறையில் நீல நீச்சலுடையில் எடுக்கப்பட்ட இரண்டு படங்கள் இருந்தன. பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு பல மாதங்களுக்கு முன்பு, கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக இதனைப் பதிவிட்டிருந்தேன். இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, இயல்பாக, 24 மணிநேரம் மட்டுமே நேரலையில் இருப்பதால், அந்தப் புகைப்படங்களை இப்போது பார்க்க வழி இல்லை. மேலும், எனது இன்ஸ்டாகிராம் சுயவிவரம் என்பது தனிப்பட்டது, அது பொதுவானது அல்ல.

பல்கலைக்கழகம் அந்தப் படங்களை எவ்வாறு அணுகியது என்பது எனக்குப் புரியாத புதிராக உள்ளது. அந்த நேரத்தில் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனது தனிப்பட்ட படங்கள் என் அனுமதியின்றி பரப்பப்பட்டன. எனக்கு தெரியாத நபர்கள், எனது அனுமதியின்றி, இதுபோன்ற இன்ஸ்டாகிராம் கதைகளை ஹேக்கிங் செய்தோ அல்லது ஸ்கிரீன் ஷாட்களை எடுத்தோ இதனைப் பரப்பியுள்ளனர்.

இது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வரும்” என தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in