
கொடைக்கானலில் பேருந்துகள் இயக்குவதில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடையே ஏற்பட்ட மோதலால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு அரசு ஏசி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு சாதாரண அரசு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏசி பேருந்து ஓட்டுநர் அந்த பேருந்தை தாமதமாக இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்து உள்ள சாதாரண அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
உங்களுடைய நேரத்திற்கு ஏன் ஏசி பேருந்தை இயக்கவில்லை என்று அடுத்து உள்ள அரசு பேருந்து ஓட்டுநரும், கண்டக்டரும் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக ஓட்டுநர்கள் இருவரும் ஒருவரை, ஒருவர் செருப்புகளால் தாக்கிக் கொண்டனர். அந்த நேரத்தில் கொடைக்கானலில் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், கல்லூரி மாணவிகள் இருந்தனர்.
இரு தரப்பினரும் தகாத வார்த்தைகளை பேசியும், தாக்கியும் கொண்டதை பார்த்து அங்கிருந்தவர்கள் முகம் சுளித்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...