திருமணமான 21-வது நாளில் மணமகன் பலி; மணமகள் கவலைக்கிடம்

செல்ஃபியால் நடந்த விபரீதம்
திருமணமான 21-வது நாளில் மணமகன் பலி; மணமகள் கவலைக்கிடம்

ஆற்றின் அருகே செல்ஃபி எடுத்தபோது மணமகன், மணமகள் தவறி விழுந்தனர். இதில் மணமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணமகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ரெஜினால். இவருக்கும் கனிகா என்ற பெண்ணுக்கும் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் அங்குள்ள குட்டியாறு பகுதிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள பாறையில் மீது ஏறி புதுமணத் தம்பதிகள் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர்.

அப்போது, எதிர்பாராத நிலையில், புதுமணத் தம்பதிகள் ஆற்றில் விழுந்துள்ளனர். அவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டுள்ளனர். ஆனால், மணமகன் ரெஜினால் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணமகள் கனிகா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in