'அயன்' படப்பாணியில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தல்... கேரளா வாலிபர் கைது!

கேப்சூல் மூலமாக தங்கம் நடத்திய அப்துல் ரஹீம்.
கேப்சூல் மூலமாக தங்கம் நடத்திய அப்துல் ரஹீம்.

நடிகர் சூர்யா நடித்த 'அயன்' படப்பாணியில் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கக்கலவையை கேப்சூல்களில் விழுங்கி கடத்தி வந்த விமான பயணியை சுங்கத்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் வழியாக போதை மருந்து, தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்துவது வாடிக்கையாக உள்ளது. இதனால், அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை கடத்த முயற்சிப்பவர்களையும், கடத்தி வருபவர்களையும் கைது செய்து வருகின்றனர்.

கரிப்பூர் விமான நிலையம்
கரிப்பூர் விமான நிலையம்

கேரளா மாநிலம், கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் வழியாக தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் வந்த பயணி மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கி வெளியே செல்லும் போது சுங்கத்துறை அதிகாரிகள் அவரை சோதனையிட்டனர். அப்போது அவர் மூன்று கேப்சூல்களில் தங்கக்கலவையை அவர் விழுங்கிக் கடத்தி வந்தது தெரிய வந்தது.

கடந்த 2009-ம் ஆண்டு நடிகர் சூர்யா, நடிகை தமன்னா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய படம் 'அயன்' வெளியானது. வெளிநாடுகளுக்கு கேப்சூல் மூலம் போதை மாத்திரையைக் கடத்துவது தொடர்பான கதைக்களம் கொண்ட படம் தான் 'அயன்'. இப்படத்தில் போதை மருந்துகளை கேப்சூல்களில் அடைத்து அவற்றை விழுங்கிக் கடத்துவார்கள்.

'அயன்' திரைப்படம்
'அயன்' திரைப்படம்

அதை போல தங்கக்கலவையை கேப்சூல் மூலம் அடைத்து விழுங்கி ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் பயணி கடத்தி வந்த சம்பவம் சுங்கத்துறை அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரைப் பிடித்து விசாரணை நடத்திய போது,கேரளாவில் பெரிந்தல்மன்னாவில் உள்ள நெமிலி பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம்(38) என்பது தெரிய வந்தது. அவர் கடத்தி வந்த 864 கிராம் தங்கத்தின் மதிப்பு சுமார் 60 லட்ச ரூபாய் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in