அடுத்த அதிர்ச்சி... தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள மாநில அரசு தலைமைச் செயலகம்
கேரள மாநில அரசு தலைமைச் செயலகம்

கேரளா மாநில தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பொதுமக்கள் அவசர காலங்களின் போது போலீஸாரை தொடர்பு கொள்ள 112 என்ற அவசரகால சேவை திட்டம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் எந்தவிதமான அவசர சேவையாக இருந்தாலும், பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். உரிய துறைக்கு இந்த தகவல் பரிமாறப்பட்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு சேவைகள் உடனடியாக வழங்கப்படும்.

கேரள மாநில அரசு தலைமைச் செயலகம்
கேரள மாநில அரசு தலைமைச் செயலகம்

இந்நிலையில் நேற்று காலை 11:30 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் குண்டு வெடிக்கும் என, ஒரு அவசர செய்தி அம்மாநில காவல்துறை தலைமையகத்திற்கு 112 எண்ணிற்கு அனுப்பப்பட்டது.

தகவல் அறிந்தவுடன் போலீஸார் உடனடியாக தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரியவந்தது.

கேரள தலைமைச் செயலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
கேரள தலைமைச் செயலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

இதையடுத்து போலீஸார் மிரட்டல் வந்த எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, மிரட்டல் விடுத்த நபர் பொளியூர் உச்சக்கடா பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் நிலையில், அவரை அழைத்து சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, 12 வயது சிறுவன் ஒருவன் இதே எண்ணில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ள சம்பவம், கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in