கேரளா குண்டுவெடிப்பு! பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

கேரளா குண்டுவெடிப்பு
கேரளா குண்டுவெடிப்பு
Updated on
1 min read

கேரளாவில் மத வழிபாட்டு கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கலாமாச்சேரியில் கடந்த அக்டோபர் 29ம் தேதி, ஜெஹோவாஸ் விட்னெஸ் என மதக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில், வெடிகுண்டு வைத்ததாக வீடியோ வெளியிட்டு, போலீஸில் சரணடைந்த டோமினிக் மார்டின் என்பவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மார்டினை காவலில் எடுத்துள்ள போலீஸார், அத்தானியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள டோமினிக் மார்டின்
கைது செய்யப்பட்டுள்ள டோமினிக் மார்டின்

மார்டின் குண்டு தயாரிப்பதற்காக பொருட்கள் வாங்கிய இடங்களில் சுயமாக வீடியோ பதிவு செய்துள்ள நிலையில், அதையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்து தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோலி ஜாய் என்ற 61 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in