பரபரப்பு... பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர் கைது!

ஆலம் பாஷா
ஆலம் பாஷா

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பற்றி எரியும் காஸா.
பற்றி எரியும் காஸா.

இஸ்ரேல் மற்றும் பொதுமக்கள் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அக்.7-ம் தேதி தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் மூண்டுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர் இந்தியாவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்

கர்நாடகா மாநிலம், ஹோஸ்பேட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆலம் பாஷா(20). இவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த இந்திய அரசுக்கு எதிராகவும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் நேற்று வைத்ததாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in