ரீல்ஸ் மோகத்தில் மனைவி; கொந்தளித்த கணவன் - சோகத்தில் முடிந்தது புதுமண வாழ்க்கை!

ரீல்ஸ் கொலை
ரீல்ஸ் கொலை

கர்நாடகாவில் ரீல்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதில் அதிக நாட்டம் கொண்ட மனைவியை, கணவன் கழுத்தை நெரித்துக் கொன்று தந்தையின் உதவியுடன் பிணத்தை ஆற்றில் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் – பூஜா தம்பதி. இருவருக்கும் அண்மையில் தான் திருமணம் முடிந்துள்ளது. இந்த நிலையில் பூஜா சமூக வலைதளங்களில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடித் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் பூஜா ரீல்ஸ் செய்வதை நிறுத்தியதாக தெரியவில்லை. இதனால் தனது மனைவிக்கு வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா என ஸ்ரீநாத் சந்தேகப்பட்டு சம்பவத்தன்று பூஜாவை அடித்துள்ளார். ஒருக்கட்டத்தில் ஆவேசமான ஸ்ரீநாத் பூஜாவின் கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொலை
கொலை

இதனை தனது தந்தையிடம் ஸ்ரீநாத் கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து பூஜாவின் பிணத்தில் கல்லை கட்டி மோட்டர் சைக்கிள் வைத்து அருகில் இருந்த ஆற்றில் வீசியுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற ஸ்ரீநாத் குளித்துவிட்டு கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ரீல்ஸ் மோகத்தில் இருந்த மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in