மனைவி மீதான சந்தேகம் காரணமாக 230 கிலோ மீட்டர் பயணித்து போலீஸ்காரர், தனது மனைவியை கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் கிஷோர். இவருக்கும் சிக்மகளூர் பகுதியை சேர்ந்த பிரதீபா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 11 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது.
இதனிடையே திருமணமான நாள் முதலே மனைவி பிரதீபா மீது கிஷோருக்கு சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் பிரசவத்திற்காக தந்தை வீட்டிற்கு சென்றிருந்த பிரதீபாவிற்கு, கிஷோர் சுமார் 150 முறைக்கும் மேல் போனில் அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிரதீபா அந்த போன் கால்களை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிஷோர், சாம்ராஜ நகரிலிருந்து சிக்மகளூருக்கு சுமார் 230 கிலோ மீட்டர் பயணித்து பிரதீபா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு பூச்சி மருந்தை குடித்த கிஷோர், பின்னர் தனது மனைவி பிரதீபாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற கிஷோர், அங்கு பூச்சிமருந்து குடித்ததாக கூறியதால், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக பிரதீபாவின் தந்தை சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குணமடைந்த உடன் கிஷோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!
ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!
மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!