அதிர்ச்சி... காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை! குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீஸ்!

கர்நாடக காங்கிரஸ் பிரமுகர் ஸ்ரீநிவாஸ்
கர்நாடக காங்கிரஸ் பிரமுகர் ஸ்ரீநிவாஸ்

கர்நாடக மாநிலம் கோலார் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரபலம் ஸ்ரீநிவாசன் நேற்று மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கோலார் பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வந்த கட்டுமான பணிகளை பார்வையிட்டு வந்தார். அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், ஸ்ரீநிவாசன் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகியது.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ரீநிவாசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஸ்ரீநிவாசன் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, குற்றவாளிகள் பதுங்கியிருக்கும் இடம் குறித்த ரகசிய தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார், பதுங்கியிருந்த 3 பேரை சுற்றி வளைத்தனர். அப்போது, குற்றவாளிகள் தப்பிக்க போலீஸாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் முதன்மை குற்றவாளிகளான வேணுகோபால் மற்றும் மணிந்திரா ஆகியோருக்கு காலில் துப்பாக்கியால் சுட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தோஷும் காயமடைந்தார்.

இதுகுறித்து, கோலார் காவல் கண்காணிப்பாளர் எம்.நாராயண் கூறுகையில், இந்த சம்பவம் பழிவாங்கும் நோக்குடன் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சம்பவ இடத்தில் பயங்கர ஆயுதங்கள் அடங்கிய பை கண்டுபிடிக்கப்பட்டது. என்றும், தாக்குதலின் போது ஸ்ரீநிவாஸ் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஸ்ரீநிவாஸ் கர்நாடக முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் மற்றும் உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in