அழகுக்கலை நிலைய ஊழியரிடம் அத்துமீறல்; கர்நாடக காங்கிரஸ் தலைவர் கைது!

மனோஜ் கர்ஜாகி
மனோஜ் கர்ஜாகி

கர்நாடகத்தின் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ் கர்ஜாகி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், தர்வாட் நகரில் ஸ்பா மற்றும் சிகையலங்கார நிலையம் நடத்திவருகிறார்.

இந்நிலையில், நேற்று தனது ஸ்பாவுக்குச் சென்றிருந்த மனோஜ் கர்ஜாகி, அங்கு பணிபுரியும் பெண் ஊழியரைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது ஆண் நண்பரை போனில் அழைத்து இதுகுறித்து தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்குத் தனது நண்பர்களுடன் வந்த அந்த நபர், மனோஜ் கர்ஜாகியை அடித்து உதைத்தார்.

அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில், மனோஜ் கர்ஜாகியை போலீஸார் கைதுசெய்தனர். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

கைதுசெய்யப்பட்டிருக்கும் மனோஜ் கர்ஜாகி முன்னாள் அமைச்சர் ஒருவரின் முன்னாள் உதவியாளர் என்றும் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்றும் காங்கிரஸ் கட்சி விளக்கமளித்திருக்கிறது.

குறிப்பாக, சித்தராமையா முதல்வராக இருந்த காலகட்டத்தில் வடமேற்கு போக்குவரத்து கார்ப்பரேஷனின் இயக்குநராக இருந்தவர். சித்தராமையாவுடன் அவர் நிற்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகியிருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in