டியூஷன் சென்ற மாணவன் கடத்திக் கொலை: காதலனுடன் ஆசிரியை கைது!

டியூஷன் சென்ற மாணவன் கடத்திக் கொலை: காதலனுடன் ஆசிரியை கைது!
Updated on
2 min read

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே டியூஷன் சென்ற மாணவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆசிரியையும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர்.

பிரபல தொழிலதிபரின் 17 வயது மகன் குஷாக்ரா கனோடியா என்பவர், ரச்சிதா என்ற ஆசிரியையிடம் டியூஷன் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 30-ம் தேதி டியூஷன் சென்ற மாணவனை காணவில்லை. இதையடுத்து மாணவனின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்து போலீஸார் மாணவனை தேடி வந்த நிலையில், கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் 30 லட்சம் கொடுத்தால் உங்கள் மகனை தருவோம் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், கடிதத்தில் இஸ்லாமியர் கடத்தியது போல் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியதை அடுத்து, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஆசிரியை ரச்சிதாவும், அவரது காதலன் பிரபாத்தும் மாணவனை கொலை செய்தது தெரியவந்தது.

காவல்துறையினரை குழப்புவதற்காக கடிதத்தில் இஸ்லாமியர் கடத்தியது போல் குறிப்பிட்டிருந்தனர். 3 நாட்களாக மாணவனை பின்தொடர்ந்த பிரபாத், டியூஷனில் இருந்து வீட்டில் கொண்டு சென்று விடுவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் மாணவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கலந்த காபியை கொடுத்து கழுத்தை நெறித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் பிரபாத்தும், அவரது நண்பர் சிவாவும் உடலை வீசியுள்ளனர்.

கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பிரபாத்தையும், அவரது காதலியான டியூசன் ஆசிரியை, நண்பர் சிவா ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, மாணவரை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in