அதிர்ச்சி! உணவகத்தில் வெடித்து சிதறிய சிலிண்டர்கள்; அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

உணவகத்தில் தீ விபத்து
உணவகத்தில் தீ விபத்து

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் சிற்றுண்டி உணவகம் வைத்துள்ளார். இன்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்த பிறகு உணவகத்தில் ஊழியர்களை விட்டு விட்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். சிறிது தூரம் சென்ற நிலையில் உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மூன்றும் அடுத்தடுத்து வெடித்து விபத்துக்குள்ளானது. இதனை கண்ட உணவக ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

உணவகத்தில் தீ விபத்து
உணவகத்தில் தீ விபத்து

இந்த விபத்தால் உணவகத்தின் குடிசை முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக சுங்குவார்சத்திரம் போலீஸாருக்கும், ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அருகில் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாத வண்ணம் கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து நேரிடும் போது அவ்வழியாக யாரும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in