எடுக்கப்போனது ஆல்பம்.. எடுத்தது செல்ஃபி : ரயில் மோதி பலியான கானா பாடகர்!

எடுக்கப்போனது ஆல்பம்.. எடுத்தது செல்ஃபி : ரயில் மோதி பலியான கானா பாடகர்!

தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற கானா பாடகர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நெல்லூர்பேட்டை புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்த கானா பாடகர் வசந்தகுமார்(22). இவர் கானா பாடல்களை எழுதுவதுடன் அதை படமாக்கி யூடியூப்பில் பதிவு செய்து வந்தார்.

குடியாத்தம் அருகே உள்ள மேல் ஆத்தூர் ரயில் நிலையம் அருகே தனது நண்பர்களுடன் கானா பாடலுக்கு ஆல்பம் எடுக்க நேற்று சென்றார். ரயில் தண்டவாளப் பகுதியில் நின்று வசந்தகுமார் செல்ஃபி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே வசந்தகுமார் உயிரிழந்தார்.

இதைக்கண்ட அவரது நண்பர்கள் கதறித்துடித்தனர். தகவலறிந்த மேல்பட்டி மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வசந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். நேற்று முன்தினம் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய வசந்தகுமார், நேற்று ரயில் மோதி இறந்த சம்பவம் புத்தர்நகர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in