
சங்ககிரி அருகே லாரியின் பின்புறத்தில் சுற்றுலா வேன் மோதியதில் ஒரு பெண் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா இன்று சென்னையில் கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து அவரது கட்சி தொண்டர்கள் சென்னையை நோக்கி படையெடுத்துள்ளனர்.
இதில் கமலின் கோட்டையான கோவையில் இருந்தும் பல தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்துகொள்ள நேற்று இரவு சென்னை புறப்பட்டனர். அதில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பிரபு, வட்டச் செயலாளர் வாசுதேவன் ஆகியோர் தலைமையில் 19 பேர் சுற்றுலா வேனில் சென்றனர்.
அப்போது, அவர்கள் சென்ற சுற்றுலா வேன் சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஓட்டுநர் கோவை சங்கர் (35), கோவை புலியங்குளம் பகுதியைச் சேர்ந்த கிட்டான் மகன் மாரிமுத்து (44), ராஜ்குமார் மகள் மல்லேஸ்வரி (23), கருப்பையா மகன் பவன்சாய் (44), வீரபாண்டியன் மகன் வெங்கடேஷ் (26), அப்புசாமி மகன் வாசுதேவன் (46), பால்ராஜ் மகன் தீனதயாளன் (45) ஆகியோர் காயமடைந்தனர்.
இதில் பலத்த காயமடைந்த வேன் ஓட்டுநர் சேலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையிலும், மல்லேஸ்வரி, வெங்கடேஷ் இருவரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்