அதிர்ச்சி... மனஅழுத்தத்தால் நீதிபதி தற்கொலை!

அதிர்ச்சி... மனஅழுத்தத்தால் நீதிபதி தற்கொலை!

நீதிபதி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் உமாரியா மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் பிரேம் சின்ஹா (63). ஓய்வுபெற்ற பிறகு, சின்ஹா மாநிலத்தில் உள்ள ஒரு தீர்ப்பாயத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருந்தார். கடந்த ஒருமாதமாக அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மனநல டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சின்ஹா படுக்கையில் காணாததால் அவரது மனைவி அவரை தேடி உள்ளார். அப்போது வீட்டின் முன் வளாகத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in