சேலம் நீதிமன்றத்தில் நீதிபதிக்கு கத்திக்குத்து

பரபரப்பு
சேலம் நீதிமன்றத்தில் நீதிபதிக்கு கத்திக்குத்து

சேலம் நீதிமன்றத்தில் நீதிபதியை ஊழியர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் பொன்பாண்டியன். இவர் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று வந்தார். அப்போது அவரது அலுவலக ஊழியராக இருந்த பிரகாஷ், மறைத்து வைத்திருந்த கத்தியால் பொன்பாண்டியனைக் குத்தினார். இதில் நீதிபதி பொன்பாண்டியன் படுகாயமடைந்தார். அவரை உடடினயாக போலீஸார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கத்தியால் குத்திய பிரகாஷைப் பிடித்து விசாரித்தனர். அதில், பணிமாறுதல் ஆணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதியை அவர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. சேலம் நீதிமன்றத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in