என்ஜின் இல்லாமல் ஓடிய ரயில் பெட்டி
என்ஜின் இல்லாமல் ஓடிய ரயில் பெட்டி

பகீர்... திடீரென என்ஜின் இல்லாமல் ஓடிய ரயில் பெட்டிகள்; பயணிகள் ஷாக்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திடீரென என்ஜின் இல்லாமல் ஓடிய ரயில் பெட்டிகளால் பயணிகள் அதிர்ச்சியடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஷகிபாஞ்ச் பகுதியில் உள்ளது பர்ஹர்வா ரயில் நிலையம். மால்டா ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட இங்கு சிறப்பு பயணிகள் ரயிலில் இணைக்கப்பட உள்ள 5 பெட்டிகள் பராமரிப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தது. அதன் அருகிலேயே சரக்கு ரயில் ஒன்றும் நின்றிருந்தது. இந்நிலையில், என்ஜின் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த 5 பெட்டிகளில் ஒன்று திடீரென தண்டவாளத்தில் நகரத் தொடங்கியது.

ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் இதனை கண்டு உடனடியாக அதிகாரிகளிடம் கூறினார். விரைந்து வந்த ரயில்வே பணியாளர்கள், ஒரு பெட்டியை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அதற்குள் மற்றொரு பெட்டி நகர்ந்து சென்று, நின்றிருந்த மற்றொரு பெட்டி மீது மோத அதுவும் நகர்ந்து செல்லத் தொடங்கியது.

என்ஜின் இல்லாமல் ஓடிய ரயில் பெட்டி
என்ஜின் இல்லாமல் ஓடிய ரயில் பெட்டி

நல்வாய்ப்பாக தண்டவாளத்தில் சில மீட்டர் தொலைவிற்கு அந்த பெட்டிகள் ஓடிய பின் தானாக நின்றது. இதனால், அங்கு கடுமையான கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. மேலும் பலர் ரயில் தானாக ஓடியதை ஆச்சர்யத்துடன் பார்த்த படி ஆபத்தை உணராமல் ஓடிச்சென்று செல்போனில் வீடியோ எடுக்க துவங்கினர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மேற்கு ரயில்வே நிர்வாகவும் தெரிவித்துள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in