மாடியின் கதவு உடைப்பு... 100 சவரன் நகைகள் மாயம்: வீடு திரும்பிய தொழிலதிபர் அதிர்ச்சி

மாடியின் கதவு உடைப்பு... 100 சவரன் நகைகள் மாயம்: வீடு திரும்பிய தொழிலதிபர் அதிர்ச்சி

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆசாத்(42). இவர் சென்னை குன்றத்தூர், மணிகண்டன் நகர், 1-வது பிரதான சாலை 3 மாடிகள் கொண்ட குடியிருப்பில் கடந்த 10 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகின்றார். ஆசாத் அனகாபுத்தூர் சர்வீஸ் ரோட்டில் அம்சா லெதர்ஸ் என்ற பெயரில் தோல் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி ஆசாத் தனது மனைவி மானசா மற்றும் குழந்தைகளுடன் பெங்களூரு சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பினார்.

அப்போது, இரண்டாவது மாடியில் உள்ள முன்பக்க கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசாத் உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது பீரோவில் இருந்த 100 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதனையடுத்து ஆசாத் குன்றத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவயிடத்திற்கு வந்து விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.

தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.