பகீர்... ஒருதலைக் காதலால் விபரீதம்?! காவல் நிலையம் அருகே நடுரோட்டில் இளம்பெண் கொலை!

கொலை செய்யப்பட்ட கௌரி
கொலை செய்யப்பட்ட கௌரி

தட்சிண கன்னடா மாவட்டத்தில் மகளிர் காவல் நிலையம் அருகே இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஜேசிபி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை
கொலை

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள புத்தூரில் இன்று மதியம் மகளிர் காவல் நிலையம் அருகே இளம்பெண் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த வாலிபர், அந்த இளம்பெண்ணை வழிமறித்தார். அப்போது அவருடன் வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணின் கழுத்தை அறுத்தார்.

பரபரப்பான சாலையில், பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வாலிபர் கத்தியால் அறுத்ததால் ரத்த வெள்ளத்தில் இளம்பெண் மயங்கி விழுந்தார். இதையடுத்து பைக்கில் வந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

கொலை
கொலை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளம்பெண்ணை புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதன் பின் மேல் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பத்மராஜா
பத்மராஜா

இந்த சம்பவம் குறித்து புத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது கொலை செய்யப்பட்ட இளம்பெண் கௌரி(20) என்றும், பந்த்வாலின் விட்டலில் உள்ள அலிகே என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அரசு பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் அவர் வேலை செய்து வந்துள்ளார். இன்று புத்தூர் மார்க்கெட்டுக்கு சென்ற கௌரி, மகளிர் காவல் நிலையம் வழியாக கடைக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது.

அவரைக் கொலை செய்தவர் மணிநல்கூர் கிராமத்தில் உள்ள நைபேலுவைச் சேர்ந்த பத்மராஜா என்பது தெரிய வந்தது. ஜேசிபி டிரைவரான அவரை பந்த்வாலுக்கு அருகே உள்ள மாவினகட்டே என்ற இடத்தில் போலீஸார் கைது செய்தனர். ஒரு தலைக்காதலால் கௌரியை அவர் கொலை செய்தாரா அல்லது வேறு விவகாரத்தில் கொலை செய்தாரா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் காவல் நிலையம் அருகே இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தட்சிண கன்னடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in