துரத்தும் கோடநாடு வழக்கு... நெஞ்சுவலியால் சுருண்ட தனபால்... மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!

கனகராஜின் சகோதரர் தனபால்
கனகராஜின் சகோதரர் தனபால்

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓட்டுனரான கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி நடந்த கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓட்டுனரான கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், கனகராஜ் உயிரிழந்த சம்பவம் சாலை விபத்து என்று கூறப்பட்ட நிலையில் கனகராஜ் அண்ணன் தனபால் என்பவர் அதை மறுத்து, கனகராஜ் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி வந்தார். இதையடுத்து இந்த வழக்கு விபத்து என மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, நில அபகரிப்பு வழக்கில் கடந்த வாரம் கனகராஜின் சகோதரர் தனபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தனபாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோடநாடு வழக்கில் தடயங்களை அழிக்க முயன்றதாக தனபால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே இருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in