ஜல்லிக்கட்டு போராட்டம் : 5 ஆண்டுகளுக்குப் பிறகு 22 பேர் விடுதலை

ஜல்லிக்கட்டு போராட்டம் : 5 ஆண்டுகளுக்குப் பிறகு 22 பேர் விடுதலை

மதுரை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரயிலை தடுத்து நிறுத்திய வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 22 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததைக் கண்டித்து 2017-ல் தீவிர போராட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அப்போது கோவையிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயிலை செல்லூர் வைகை பாலத்தில் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். அந்த ரயிலை 4 நாட்களாக விடாமல் போராட்டக்காரர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். போலீஸாரின் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சாகுல்அமீது, சதாம் உசேன், முத்துக்குமார், ராமுத்தாய், கஸ்தூரி உட்பட 22 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி நாகலெட்சுமி முன்பு இன்று நடைபெற்றது. " போதுமான சாட்சிகள் இல்லை. மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை" என்று கூறி 22 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in