
ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் அமைப்பினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆளும் தலிபான் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, ஐஎஸ் அமைப்பினர் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து தொடர் தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் உள்ள தெருவில், விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் திடீரென வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் கடை முற்றிலும் சேதமடைந்ததோடு, சாலையில் பெரும் பள்ளமும் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக, ஆளும் தலிபான் அரசின் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே இதற்கு பொறுப்பேற்றுள்ள ஐஎஸ் அமைப்பு, சூட்கேஸ் வெடிகுண்டு மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு
நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!
சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து