
மருத்துவர்கள் இல்லாததால், சென்னை புளியந்தோப்பில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை ஆடுதொட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (34) என்பவரின் மனைவி நர்மதாவுக்கு (33), இரண்டு மாதங்களுக்கு முன்பு புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு ஏற்கெனவே 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், நர்மதாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உறவினர்கள் அவரை புளியந்தோப்பில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ரத்தப்போக்கு குறையாததால், மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நர்மதா உயிரிழந்தார். இந்நிலையில், புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டதே தனது மனைவி உயிரிழக்க காரணம் என அவரது கணவர் விஜயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்த அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!
இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!
அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!
வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!
சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!