ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: ஆம்பூரில் கல்லூரி மாணவர் அதிரடி கைது!

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: ஆம்பூரில் கல்லூரி மாணவர் அதிரடி கைது!

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாகக் கல்லூரி மாணவர் ஒருவர் மத்திய உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நீலிக்கொல்லி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் அனாஸ் அலி. கல்லூரி மாணவரான இவர் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஐஎஸ் அமைப்பில் இணைந்து பணியாற்றுவதாக மத்திய உளவுப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை நீலிக்கொல்லி வந்த மத்திய உளவுப் பிரிவு போலீஸார் அனாஸ் அலியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஐஎஸ் உடனான தொடர்புகள் குறித்து அவரிடம் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக கேள்விகள் எழுப்பினர். இதைத் தொடர்ந்து அவருக்கும் ஐஎஸ் அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்தி வந்த செல்போனை மத்திய உளவுப் பிரிவு போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரை வேலூர் அழைத்துச் சென்ற மத்திய உளவுப் பிரிவு போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மீது சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in