இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: உடன்பிறந்த சகோதரிகளுக்கு நேர்ந்த விபரீதம்!

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: உடன்பிறந்த சகோதரிகளுக்கு நேர்ந்த விபரீதம்!

ஹைதராபாத்தில், உடன்பிறந்த இரு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளது.

தன்னுடைய 15 மற்றும் 17 வயதுடைய மகள்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, அந்த சிறுமிகளின் பெற்றோர் ஜூன் 8-ம் தேதி ஹைதராபாத் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட முகமது இம்தியாஸ் அகமது (23) மற்றும் முகமது நவாஸ் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தொடர் குற்றங்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

நவாஸ் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் இதில் ஒரு சிறுமியுடன் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டு, காதலிப்பதாகக்கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும், மற்றொரு சிறுமியை அகமது என்ற நபர் காதலிப்பதாகக்கூறி பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் அந்தச் சிறுமிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் காவல்துறை தகவல் தெரிவிக்கிறது.

குற்றம்சாட்டப்பட்ட அகமது மீது 23 திருட்டு வழக்குகள் உள்ளதாகவும், இவர் போதைப்பொருள் வழக்குக்காக ஒரு வருடம் சிறையில் இருந்தவர் எனவும் போலீஸார் தெரிவித்தனர். நவாஸ் என்பவர் மீது 6 வழக்குகள் உள்ளதாகவும், இதனால் இவர் ஏற்கெனவே 6 மாதம் சிறையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in