
2 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற ஹரியாணாவைச் சேர்ந்த யோகேஷ் கடியான் என்பவருக்கு எதிராக சர்வதேச காவல்துறை தடுப்பு ஆணை பிறப்பித்துள்ளது.
இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை, முக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக ரெட்கார்ட் நோட்டீஸ் எனும் தடுப்பு ஆணைகளை பிறப்பிப்பது வழக்கம். இது சர்வதேச காவல்துறையின் உறுப்பு நாடுகளுக்கு இன்டர்போல் அனுப்பும் ஆணையை குறிக்கும். இவ்வாறு அனுப்பப்படும் தடுப்பு ஆணைகளின் போது அந்த நபரை கண்டுபிடித்து, தற்காலிகமாக எந்த நாடும் தடுத்து வைக்க முடியும்.
இந்நிலையில் 2 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்ற ஹரியாணாவைச் சேர்ந்த யோகேஷ் கடியன் என்பவருக்கு எதிராக இன்டர்போல் தடுப்பு ஆணை பிறப்பித்துள்ளது.
19 வயதான யோகேஷ், அமெரிக்காவிற்கு போலி பாஸ்போர்ட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்றுள்ளார். இவர் மீது பல்வேறு குற்றச்சதிகள் மற்றும் கொலை முயற்சிக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயுதங்களை கையாள்வதில் திறன் வாய்ந்த இவர், பாம்பிஹ என்கிற கும்பலோடு தொடர்பில் இருப்பவர் எனவும், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவருக்கும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு அகமதாபாத் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஸ்னாய் என்கிற நபரின் குழுவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் யோகேஷுக்கு தடுப்பு ஆணை பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!