
மதுரையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, வலிப்பு நோய் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் திருட்டு வழக்கில் கைதான பால்பாண்டி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் வலிப்பு நோய்க்கு சிகிச்சை எடுப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து பால்பாண்டி தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவரை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.