லிஃப்டில் 2 மணி நேரம் சிக்கிய சிறுவன்... தனியே செய்த காரியத்தால் பாராட்டிய மீட்பு குழுவினர்!

லிஃப்டில் 2 மணி நேரம் சிக்கிய சிறுவன்... தனியே செய்த காரியத்தால் பாராட்டிய மீட்பு குழுவினர்!

தனது தந்தை சொல்லைக் கேட்டு பழுதடைந்த லிஃப்டில் சிக்கிக் கொண்ட சிறுவன் மிக தைரியமாக எதிர் கொண்ட சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் டியூசன் வகுப்புக்குச் செல்வதற்காக கார்விட் என்ற 8 வயது சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பில் 4வது மாடியில் இருக்கும் தனது வீட்டில் இருந்து லிஃப்டில் கீழே இறங்கியுள்ளார். அப்போது லிஃப்ட் இரண்டாவது மாடியில் சிக்கிக் கொண்டது. வழக்கமாக சிறுவனுடன் அவன் தாய் வருவது வழக்கம். ஆனால் அன்று சிறுவனின் தாய்க்கு உடல் நிலை சரியில்லாததால் சிறுவன் மட்டும் தனியாக சென்றுள்ளான். மாலை 6 மணி அளவில் கார்விக் டியூசன் வகுப்பிற்கு வராதது குறித்து ஆசிரியர் கார்விட்டின் தந்தை பவான் சண்டிலாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுவனைத் தேடிய போது தான் லிஃப்ட் பழுதாகி நின்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சிறுவனின் பெற்றோரும் அருகில் இருப்பவர்களும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் இரண்டு மணி நேரம் போராடி, லிஃப்ட்டில் சிக்கிக் கொண்டிருந்த சிறுவனைக் காப்பாற்றியுள்ளனர்.

மிகவும் பதற்றத்துடன் லிஃப்டிற்குள் மீட்புக் குழுவினர் சென்ற போது அந்த சிறுவன் எந்தவித பயமும் இன்றி கூலாக லிஃப்டில் அமர்ந்துக் கொண்டு வீட்டு பாடம் எழுதிக் கொண்டிருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தனர். சிறுவனிடம் இது குறித்து கேட்ட போது, லிஃப்ட் பழுதாகி நின்றவுடன் எமெர்ஜென்சி பட்டனை அழுத்தியதாகவும், கதவை தட்டியதாகவும் ஆனால் யாரும் தன்னை மீட்க வரவில்லை என்றும் கூறியுள்ளான். பிறகு அமைதியாக அமர்ந்து தனது வீட்டுப்பாடத்தை எழுத தொடங்கியதாக கூறியிருக்கிறான்.

எப்படி பயப்படாமல் உன்னால் இருக்க முடிந்தது என கேட்டபோது, அந்த சிறுவன் சொன்ன பதில் தான் அனைவருக்குமான பாடம். இக்கட்டான நேரங்களில் பதற்றப்படவோ பயப்படவோ கூடாது என தனது தந்தை சொல்லிக் கொடுத்திருப்பதாக சொல்லியிருக்கிறான் அந்தச் சிறுவன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in