வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு: ஆனந்தாஸ் உணவகக் குழுமத்தில் அதிரடியாக ஐடி ரெய்டு

வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு: ஆனந்தாஸ் உணவகக் குழுமத்தில் அதிரடியாக ஐடி ரெய்டு

கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தன் கிளையைப் பரப்பி இருக்கும் ஆனந்தாஸ் உணவகக் குழுமத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையை மையமாகக் கொண்டே இந்த ஐடி ரெய்டு நடந்துவருகிறது. மணிகண்டன் என்பவர் இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். ஆனந்தாஸ் உணவகம் வரி ஏய்ப்பு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டதால்தான் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருதாகவும், ஆவணங்களைக் கைப்பற்றவே இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இன்று காலை முதல் நடந்துவரும் இந்த வருமான வரித்துறை சோதனை, இப்போதும் தொடர்ந்து வருகிறது. கோயம்புத்தூரில் காந்திபுரம், லட்சுமி மில்ஸ், வடவள்ளி உள்பட இருபதுக்கும் அதிகமான ஆனந்தாஸ் உணவகக் குழுமத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றுவருகிறது.

உணவகங்களில் மட்டுமல்லாமல், அதன் உரிமையாளர் மணிகண்டனின் இல்லம், உணவத்திற்கு சொந்தமான 5 வீடுகள் ஆகிய இடங்களிலும் இந்த வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியிலும் இதேபோல் வருமான வரித்துறை அதிகாரிகள் குழு ஒன்று தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். சோதனையின் முடிவில் தான் வரி ஏய்ப்பு பற்றிய தகவல்கள் தெரியவரும் எனத் தெரிகிறது.

பிரபல சைவ உணவகமான ஆனந்தாஸ் குழுமத்தில் ஐடி ரெய்டு நடந்துவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in